இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 1129.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது.
நவம்பர் மாதத்தில் மட்டும் இலங்கை சுற்றுலாத்துறை மூலம் 107.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கையின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
நவம்பர் மாதத்தில், 59,759 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இது ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 42% அதிகரிப்பாகுமெனவும், 2022 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் 628,017 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் 104,989 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்ததோடு, முழு காலப்பகுதியில் ஈட்டிய வருமானம் 273.6 மில்லியன் அமெரிக்க டொலர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.