ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாகப் போட்டியிடும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு நிபந்தனையுடனான ஆதரவை வழங்குவதென, கட்சியின் உயர்பீட உறுப்பினர்களால் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில், கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகமான “தாருஸ்ஸலாமில்” இன்று (04) காலை இடம்பெற்ற ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்திலேயே, இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், மரிக்கார் உள்ளிட்ட மு.கா. பிரபலங்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.
( ஐ. ஏ. காதிர் கான் –
அஷ்ரப் ஏ. சமத் )