ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 25 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில், வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றைய ஆயத்தப் பணிகளில் அந்தச் செயற்பாடுகள் அட்டவணையின்படி நடைபெறுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கட்டுப்பணம் மற்றும் வேட்பு மனு தாக்கல் ஆகியவை திட்டமிட்டபடி நடைபெற்றதைச் சுட்டிக்காட்டிய அவர், 13,134 வாக்குச் சாவடிகள் மற்றும் 45 வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் வளாகங்களை ஆணையம் இப்போது கண்காணித்துவருகிறது என்றும் தெரிவித்தார்.
தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களையும் சோதனை செய்து வருதாகவும் அவர் தெரிவித்தார். தபால் வாக்குகளுக்கான வாக்குச் சீட்டுகள் இன்று வெளியிடப்படும் என்றும், தேர்தல் ஆணையம் அதற்கான ஏற்பாடுகளை முடித்துவிட்டதாகவும் ரத்நாயக்க தெரிவித்தார். அரச சொத்துக்களை பயன்படுத்தி ஒரு வேட்பாளரை ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்களை அவர்கள் இடைநிறுத்தியுள்ளதாகவும், எந்த வேட்பாளராக இருந்தாலும் அவருக்கு எதிராக செயற்படத் தயங்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.
ஒரு வேட்பாளர் தனது சொந்த நிதியைப் பயன்படுத்தினாலும், பொதுச் சொத்தை தனது விளம்பரப் பணிகளுக்குப் பயன்படுத்தினாலும், அது நிறுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இதன்படி, திட்டப்பணிகளின் திறப்பு விழா மற்றும் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சிகள் போன்றவை நிறுத்தப்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தலுக்கு அட்டை மற்றும் மரப்பெட்டிகள் இரண்டையும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் வாக்குச் சீட்டு 2019ஆம் ஆண்டுக்கான வாக்குச் சீட்டைப் போலவே நீளமாக இருப்பதால், தேர்தல் ஆணையம் அதிக அட்டைப் பெட்டிகளை வாங்க வேண்டியுள்ளது என்றார்.
காதிர்கான்