ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி அரசியல் அலுவலக திறப்பு விழாவில் கலந்துக்கொண்ட ஜீவன் தொண்டமான அவருக்கு அழகான ஓவியத்தை பரிசளித்துள்ளார்.
மலையகத் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞரான செல்லையா கோபாலன் வரைந்த ஓவியத்தை பரிசாக வழங்கியுள்ளார்.
கடந்த 200 வருடங்களில் மலையகத் தமிழ் சமூகம் மற்றும் இலங்கை சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பின் வரலாற்றுக் கதையாக இந்த ஓவியம் அமைந்துள்ளது.
ஒவ்வொரு பெருந்தோட்ட குடும்பத்திற்கும் 10 பேர்ச் காணி வழங்குதல், பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாயாக அதிகரிப்பது உட்பட பெருந்தோட்ட சமூகத்தை இலங்கை சமூகத்துடன் முழுமையாக இணைப்பதற்கும், மேலும் பல முன்றேத்திற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்புக்காக நன்றியின் அடையாளமாக இந்த நினைவுப் பரிசு அமைந்துள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது முகப்புத்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.