ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை

0
253

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க விவசாயிகளுக்கு 25,000 ரூபா உர மானியமும், மீனவர்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்காக  எடுத்த தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.

பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான மானியத்தை வழங்க தீர்மானித்ததன் மூலம் ஏனைய வேட்பாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற்கொண்டு, குறித்த மானியம் வழங்கும் ஜனாதிபதியின் தீர்மானத்தை இடைநிறுத்துவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் மற்றும் கடல் தொழிலாளர்களுக்கு வழங்குமாறு அரச தலைவர் அனுரகுமார திசநாயக்கவினால் அறிவிக்கப்பட்ட உரம் மற்றும் எரிபொருள் மானியத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.

விவசாயிகளுக்கு 25,000 ரூபா உர மானியமும் கடல் தொழிலாளர்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குமாறு அரச தலைவர் பணிப்புரை விடுத்திருந்தார்.

தேர்தல் அறிவிக்கப்படும் போது, ​​அத்தகைய மானியங்களை வழங்குவதில் வேட்பாளர்களுக்கு ஏற்படும் பாதகத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தேர்தலின் பின்னர் உரிய கொள்கை தீர்மானங்களை நடைமுறைப்படுத்துமாறு அரச தலைவருக்கு அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த மானியங்கள் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்பட இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு உத்தரவுகளையும் முன்னாள் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்தபோது நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுத்திருந்த போதிலும், தேர்தல்கள் ஆணைக்குழு அதனை இடைநிறுத்தியிருந்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொதுத் தேர்தலின் பின்னர் குறித்த மானியம் வழங்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here