ஜனாதிபதியுடன் சிநேகபூர்வமாகக் கலந்துரையாடிய சிறீதரன்

0
113

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது புதிய ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு வாழ்த்துத் தெரிவித்த முன்னாள் எம்.பி. சிறீதரன், சமகால அரசியல் விடயங்கள் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரனைச் சந்தித்தேன்.

இதன்போது புதிய ஆட்சிக்கு வாழ்த்துத் தெரிவித்த சிறீதரன், சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார்.” – என்றுள்ளது.
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here