கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு செல்லும் வீதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தனது இரு நண்பிகளுடன் குறித்த பகுதிக்குச் சென்ற ஹிருணிக்காவை செல்ல விடாமல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் நுழையவிடாமல் பொலிஸார் வீதித் தடைகளை அமைத்து உள் நுழைய விடாமல் தடுத்தனர்.
பயணிகளுக்கு குறித்த பகுதியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டபோதும் ஹிருணிகாவிற்கு வழங்கப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.