எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல் இல்லாத இரு பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மற்றும் பிரதமராக நியமித்தால் ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலிருந்து விலகத் தயார் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல்களின்றி ஜனாதிபதி மற்றும் பிரதமரை நியமிப்பது தொடர்பில் இணக்கப் பாட்டுக்கு வருவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளடனும் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியதாகவும் அவர் கூறினார்.
சில கட்சிகள் இந்த விடயத்தில் ஒரு மித்த கருத்துக்கு வர ஒப்புக் கொண்டாலும் இப்போது அவற்றின் நிலைப்பாடு மாறி விட்டது. எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல் இல்லாத இரு பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மற்றும் பிரதமராக நியமிக் கும் முயற்சி யிலிருந்து நாம் பின்வாங்க வில்லை.
இவ்வாறான இணக்கப்பாடு எட்டப்பட்டால் இறுதி நேரத்திலும் நான் போட்டியிலிருந்து விலகத் தயார். ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முயற்சி செய்து வருகிறார். அவரின் நகர்வுகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.