ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக பதினொரு உறுப்பினர்கள் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க அவர்களோடு கைகோர்க்க உள்ளதாக ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 85 சத வீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார்.
நுவரெலியா மாவட்ட தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் (25) நுவரெலியா தேர்தல் தொகுதிக்குட்பட்ட வாக்களிப்பு நிலைய மட்டத்தில் கடமையாற்றும் செயலணி அமைப்பாளர்களுக்கு எதிர்வரும் தேர்தல் திட்டங்கள் குறித்து அறிவிக்கும் நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க ,
கடந்த முறை கோத்தபாய ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் வாக்குகளை மாத்திரம் வழங்கியதுடன் இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய பதினொரு பேரைத் தவிர ஏனைய அனைவரும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உள்ளனர்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது எதிர்கட்டசிக்கு சென்றுள்ள 21 பேர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முழுமையான ஆதரவினை ரணில் அவர்களுக்கு வழங்கியுள்ளது. திகாம்பரம் கட்சியில் உள்ளவர்கள் அதிகமனோர் எம்மோடு இனைந்து கொள்வதற்கு தயாராக உள்ளனர் அது தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்