ஜனாதிபதி தேர்தல் என்பது நாட்டிற்கு ஆன தலைமைத்துவத்தை தெரிவு செய்கின்ற தேர்தல் இந்த நாட்டிலே இன்று நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைமைத்துவம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும் . நாங்கள் மக்களுடன் சேர்ந்து நாட்டுக்கு சரியான வழியினை காட்ட வேண்டிய கடப்பாடு மக்கள் பிரதிநிதியாக எனக்கு இருக்கின்றது.
இன்று இருக்கின்ற பொருளாதாரத்தை இருக்கின்ற நாட்டின் உடய நிலையை உயர்த்தி நிறுத்த கூடிய அறிவும் தகமையும் ஆற்றலும் இருக்கின்ற ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்பதை நாங்கள் வந்து புரிந்துகொள்ள வேண்டும் .
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முழு ஆதரவு வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் இன்று கண்டியில் முதல்முதலில் ஊடகசந்திப்பு வைத்து தெரிவித்தார் .
ஆகவே நாட்டுக்கும் எங்களது சமூகத்திற்க்கும் நாங்கள் நாளைய நாளை பற்றிய நம்பிக்கையை கொடுக்க வேண்டும் ஆக இருந்தால் அதனை ரணில் விக்கிரமசிங்க மூலமே நிறைவேற்ற முடியும் என்பதை நான் கூறி வைக்கிறேன்,
மேலும் 2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் மலையக மக்களை பொருத்தவகையிலே ஒரு பொற்கால பகுதி மலையக மக்களுக்கான ஏழு பேர்ச்சஸ் நிலம் ஒதுக்கப்பட்டது தனி வீடுகள் கட்டப்பட்டது புதிய கிராமங்கள் உறுவாக்கப்பட்டது இதற்கு தலைமை கொடுத்தவர் ரணில் விக்கிரமசிங்க என்பதை நான் இந்த இடத்தில் ஞாபகப்படுத்த வேண்டும் .
மலையக அபிவிருத்திக்கான புதிய அதிகார சபையை அங்கிகரித்தது கிட்டிய பாடசாலை நல்ல பாடசாலை திட்டத்தின் கிழ் மலையக பாடசாலை அனைத்தையும் தேசிய மட்ட அளவுக்கு அபிவிருத்தி செய்தது நூவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளை பத்தாக உயர்த்தியது 5 பிரதேச சபைகளை 10 ஆக உயர்த்துவதற்க்கான வர்த்தமானி வெளியிட்டதும் ரணில் விக்கிரமசிங்க தான் என்பதை மீண்டும் ஞாபக படுத்தி கூற விரும்புகிறேன் .
ஆகவே நாட்டுக்கும் நல்லதை செய்வதற்கு எங்கள் சமூகத்திற்க்கு நல்லதை செய்வதற்கு நம்பிக்கை கூறிய தலைவர் என்றால் அது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதனால் தான் நான் ஒரு சுயட்சையான பாராளுமன்ற உறுப்பினர் ஆக சுயட்சை வேட்பாளராக இருக்க கூடிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எங்களுடைய முழு ஒத்துழைப்பையும் முழு பங்கு அளிப்பயும் நாங்கள் வழங்குவதற்க்கு முன்வந்து உள்ளோம் ,
எங்களுக்கு தெரியும் கடந்த கால முழுவதும் கண்டி மாவட்ட மக்களின் உடைய நலனுக்காக முழு நேரமாக செயற்பட்டு இருக்கின்றோம்.
எங்களின் சிலர் தங்களுடைய தேர்தல் மாவட்டத்திற்க்கு வருவது விடுமுறை நாட்களிலே சுற்றுலா பயணிகள் போல வந்து விட்டு போறவர்கள் எல்லாம் கண்டிக்கு வர போறார்களாம் கண்டியை பார்க்க போறார்களாம் நல்லது வாருங்கள் சூற்றி பாருங்கள் ஆனால் கண்டியின் உடய தமிழ் மக்களின் அடையாளம் வேலுக்குமார் என்பதை மிக தெளிவாக செல்லி வைக்கிறேன்.
மேலும் தயாசிறி ஜயசேகர ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு போனார் கட்சி அடையாளத்தை காணவில்லை தூண்டு தூண்டாக பிரிந்து தொங்கி கொண்டு இருக்கின்றது,
அன்று நாங்கள் நல்லாட்சியில் இந்த நாட்டையும் மக்களையும் மகிழ்ச்சியாக வைத்து கொண்டு இருந்த போது இது சரிவராது என கோட்டபாயவை கொண்டு வந்த பங்காளி. நாட்டை வங்குரோத்துக்கு தள்ளிவிட்டார் இன்று மீண்டும் ரணில் கட்டி எழுப்புகின்றார் கட்டி எழுப்பும் போது இரண்டாவது கோட்டபாயவை கொண்டு வருவதற்கு கூட்டு சேர்ந்து இருக்கின்ற தயாசிறி என்னை பார்த்து பார் போமிட் எடுத்ததாக குற்றச்சாட்டை முன் வைக்கின்றார் .
நான் தயாசிறிக்கு சவால் விடுகின்றேன் நான் ரெடி என்னுடைய பெயரிலே என்னுடைய தொடர்பிலே இலங்கையில் எந்த முளையிலாவது ஒரு பார் போமிட் இருக்குமாக இருந்தால் அதை நிருப்பித்தால் நான் பாராளுமன்ற உறுப்புரிமையில் இருந்து அந்த நிமிடமே விலக தயாராக இருக்கின்றேன்.
தயாசிறிக்கு முதுகுஎழும்பு இருக்கின்றதா அவர் சொன்னது அவருக்கு நிருப்பிக்க முடியாவிட்டால் பாராளுமன்ற உறுப்புரிமையில் இருந்து தயாசிறி விலகுவாறா என்பதை நான் இந்த இடத்தில் சொல்லி வைக்க விரும்புகிறேன்.
ஆகவே இவ்வாறான கட்டு கதைகளையும் என் மீது சேறு புசுவதாலும் என்னுடைய மலையக மக்கள் சார்ந்த என்னுடைய குரலை ஒரு போதும் எவராலும் நிறுத்த முடியாது உண்மையும் மலையக மக்கள் சார்ந்த அபிலாஷையும் என்னுடைய குரலாக தொடர்ச்சியாக ஒளிக்கும் மட்டுமல்ல வரும் 22திகதி ஆகின்ற போது இந்த நாட்டினது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் என்பதை நான் இந்த இடத்தில் மிக உறுதியாக கண்டி மக்களுடன் சேர்ந்து கூறி வைக்கின்றோம்