அனைத்துக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஒன்றிணையுமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எழுத்துமூல அழைப்பு விடுத்துள்ளார்.
பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்காக சர்வகட்சி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிணையுமாறு அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொறுப்பை நிறைவேற்றும் வகையில், 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு அமைப்பை மீண்டும் அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான உரையாடலைக் கட்டியெழுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.