மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விலங்குகள் திடீரென இறப்பதால், பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடும் குளிருடன் கூடிய மழை மற்றும் கடும் காற்று காரணமாக 200 வரையான கால்நடைகள் இறந்துள்ள நிலையிலேயே இவ்வாறான அநிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.