ஜீவன் தொண்டமான் உட்பட 10 பேர் சரீர பிணையில் விடுதலை

0
316

களனிவெளி பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலையில் கடந்த வருடம் மே மாதம் 30ஆம் திகதி அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (03) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கில் சந்தேகநபர்களாக ஜீவன் தொண்டமான் உட்பட 10 சந்தேகநபர்களின் பெயர்கள் முன்வைக்கப்ப ட்டிருந்தன. இந்நிலையில் குறித்த நபர்களை தலா 5 இலட்சம் பெறுமதியான 2 சரீர பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இவ்வழக்கில் ஜீவன் தொண்டமான் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி பெருமாள் ராஜதுரை மற்றும் சான் குலத்துங்க ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

அதேநேரம் களனிவெளி பெருந்தோட்ட யாக்கத்திற்கு சார்பாக சட்டத்தரணிகளான பாலித்த சுபசிங்க மற்றும் சுரேஷ் கயான் ஆகியோர் பிரசன்னமாகினர்.
இதன்போது குறித்த வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here