ஜே.வி.பியின் வன்முறை வரலாறுகளை மக்கள் இன்றும் மறக்கவில்லை

0
79

“நாட்டில் பொருளாதார நெருக்கடியின் போது நிபந்தனையின்றி நாட்டை ஏற்பவருக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தோம். ஆனால், எதிர்கட்சித்தலைவர் சஜித் அதற்காக முன் வரவில்லை. அப்போதுதான் ஜனாதிபதிரணில் விக்ரமசிங்கவை தெரிவுசெய்தோம். தனது திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக இருந்தால்ஏற்றுக் கொள்வதாக சொன்னார். அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்பை சரியாக செய்து முடித்தார்.  மொனராகலையில் இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற ‘இயலும்ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர்பிரசன்னரணதுங்க இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த இருவருடங்களில் மக்கள் கஷ்டங்களைப் போக்க அவர் செய்த அர்பணிப்புக்களை கண்டதாலேயே மீண்டும் ஒருமுறை ஜனாதிபதிரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவந்தோம். அதனால் சிலர் ஐக்கியதேசியகட்சியில் நாம் இணைந்து கொண்டதாக போலி பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், நாட்டுக்கு தேவையான புதிய அரசியல் கலாச்சாரத்தைப் பின்பற்றவேண்டும் என்பதாலேயே ஜனாதிபதியுடன் இருக்கிறோம்.

வாய்ச்சொலில் வெட்டி வீழ்த்தும் தலைவர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால், செயல்வீரராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே உள்ளனர். ஜே.வி.பியின் வன்முறை வரலாறுகளை மக்கள் இன்றும் மறக்கவில்லை. 2022 இலிம் அனுரகுமாரவின் தலைமையில் அதை செய்ய முற்பட்டனர். அது நடக்கவில்லை. சஜித்பிரேமதாச இன்று சொன்னதை நாளை மறந்துவிடுவார். அவ்வாறான தலைவர்கள் இந்தநாட்டுக்கு தேவையா என்பதைமக்களே தீர்மானிக்க வேண்டும்.” என்றார்.

Media Unit

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here