மீரிகம, பொக்கலகம பிரதேசத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேர்தல் பிரசார அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக, பல்லேவெல பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (28) மாலை வேளையில், குறித்த பிரசார அலுவலகத்தில் இருந்த மேசைகள், கதிரைகள் மற்றும் விளம்பரப் பலகைகளுக்கு சிலர் பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், தீ வைத்தும் எரித்துள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக, பல்லேவெல பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்தோடு, குறித்த கட்டிடமும் சிறிய அளவில் சேதம் அடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தீ வைத்த நபர், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பல்லேவெல பொலிஸார் குறிப்பிட்டனர்.
( ஐ. ஏ. காதிர் கான் )