தொலைபேசிக் கட்டணங்கள் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளநிலையில் நாடளாவிய ரீதியில் பரவலாக பாவணைக்குட்படுத்தப்படும் டயலொக் நிறுவனமும் அதன் கட்டண விபரங்களை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் டயலொக் நிறுவனம் அதன் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு கட்டணங்கள் மற்றும் பொதிகளுக்கான மீள் நிரப்பல் தொகைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளது.