‘உலகிலேயே சிறந்த மாமியார் எனக்குக் கிடைத்துள்ளார்’ என டயானா தெரிவித்ததாக செவார்ட் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், சார்லஸுக்கும் டயானாவுக்கும் இடையேயான திருமண உறவு சிக்கலானதாக செல்லச் செல்ல, ராணிக்கும் டயானாவுக்கும் இடையேயான உறவும் சிக்கலடைந்ததாக செவார்ட் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்தை சுமார் 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தனது 96-வது வயதில் மறைந்தார். அவரின் மறைவுச் செய்தி ‘London Bridge Falling Down’ என்ற வாசகத்தோடு உலகுக்கு அறிவிக்கப்பட்டது.
ராணி எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு, இங்கிலாந்தின் அடுத்த ராணி யார் என மக்களும், அதிகார வர்க்கமும் விழிபிதுங்காத வகையில், தனது சமீபத்திய உரையில் நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டுதான் ராணி எலிசபெத் மறைந்துள்ளார்.
தன் மகன் சார்லஸின் இரண்டாவது மனைவியான கமீலா தான் அடுத்த இங்கிலாந்து ராணியாக பொறுப்பேற்க உள்ளது வெட்ட வெளிச்சம். கமீலாவுக்கு முன்னதாக, உலகம் நன்கறிந்த இளவரசி டயானாதான், இங்கிலாந்தின் ராணியாக பதவியேற்றிருப்பார். எதிர்பாராத விதமாக 1997-ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழக்கஇ கமீலா ராணியாகப் பதவியேற்கவிருக்கிறார்.
இளவரசி டயானாவுக்கும்இ ராணி எலிசபெத்துக்கும் இடையேயான உறவு என்பது, நாம் அறிந்ததை விட, வித்தியாசமான ஒன்றாக இருந்துள்ளது.
டயானாவுக்கும்இ எலிசபெத்துக்கும் இடைப்பட்ட உறவு கசப்பானதாக இருந்ததாக அறியப்பட்டது கூடவே, அறியப்படாத தகவல்களும் உள்ளன. எலிசபெத் ராணியின் தனிப்பட்ட உதவியாளராக இருந்தவர் டயானாவின் தந்தை விஸ்கவுண்ட் ஆல்தோர்ப்.
ராணியின் தனிப்பட்ட உதவியாளராக தந்தை இருந்ததால், அரசு குடும்பத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தார் டயானா.
எழுத்தாளர் ஆண்ட்ரு மோர்டனின் ஹடயானா: ஹெர் ட்ரூ ஸ்டோரி’ என்ற புத்தகத்தில் 1992-ம் ஆண்டு தன் மாமியார் எலிசபெத் ராணியை பார்த்து பயந்ததாக நேர்காணலில் தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் புத்தகத்தில், எலிசபெத்தை டயானா சந்திக்கும் ஒவ்வொரு சந்திப்பையும் மிகவும் ஆழமானதாக வைத்திருந்ததாகவும்இ இருப்பினும் இருவருக்கும் இடைப்பட்ட நெருக்கம் என்பது வரையறுக்கப்பட்டதாக இருந்ததாகவும் மோர்டன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், டயானாவின் ‘பழிவாங்கும் நினைவுக் குறிப்பு’ என்று பரவலாக அறியப்படும் மோர்டனின் புத்தகம், டயானா குழப்பமான திருமணத்தின் உள்ளே இருந்து பரபரப்பான விவரங்களை வெளிப்படுத்தியதாகவும், டயானாவும் சார்லஸும் தொடக்கத்திலிருந்தே திருமண உறவில் எவ்வாறு பொருந்தவில்லை என்பதை விளக்குவதாகவும் உள்ளது.
மேலும், கமீலாவுடன் சார்லஸின் முறைதவறிய உறவால், டயானா மனச்சோர்வு அடைந்ததாகவும், டயானாவுக்கு அரச குடும்பம் எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை எனவும் வரலாற்றாசிரியர் இங்க்ரிட் செவார்ட், தனது ‘ தி குயின் அண்ட் டி’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து அரச பரம்பரையின் மதிப்புமிக்க எழுத்தாளராக அறியப்படும் இங்கிரிட் செவார்ட், எலிசபெத் ராணி முதல் டயானாவை கவனித்துக் கொள்ளும் பணியாளர்கள் வரைஇ டயானாவின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பதற்றத்துடனே பணியாற்றியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
டயானாவின் திருமணத்திற்குப் பிறகு, எலிசபெத் அவரது கஷ்டங்களை புரிந்து கொண்டதாகவும்இ இருவருக்கும் இடையே நல்ல உறவுநிலை இருந்து வந்ததாகவும், ஒருமுறை தன்னிடம் ‘உலகிலேயே தலை சிறந்த மாமியார் எனக்குக் கிடைத்துள்ளார்’ என டயானா தெரிவித்ததாகவும் செவார்ட் தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சார்லஸுக்கும் டயானாவுக்கும் இடையேயான திருமண உறவு சிக்கலானதாக செல்ல செல்ல, ராணிக்கும் டயானாவுக்கும் இடையேயான உறவும் சிக்கலடைந்ததாக செவார்ட் குறிப்பிட்டுள்ளார்.
ராணி எலிசபெத் தன் மருமகள் டயானாவுக்கு உதவ விரும்பியதாகவும், ஆனால், அது எந்த வகையில் இருந்தது என்பது தெரியவில்லை எனவும்இ டயானாவை பொறுத்தவரையில், தனது மாமியார் எலிசபெத் தனது திருமண வாழ்வை சரி செய்வார் என்ற நம்பிக்கையுடன் இருந்ததாக, டயானாவின் தனிப்பட்ட செயலாளர் பேட்ரிக் ஜெப்சன், சேனல் 5 தயாரித்த ஹடூ கோல்டன் குயின்ஸ்’ ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருவேறு தலைமுறையைச் சார்ந்த வலிமையான பெண்களுக்கு இடையே, கம்யூனிக்கேஷன் பிரச்னை இருந்ததாகவும், மேலும்,ஆவணப்படத்தில் ஒரு பகுதியாக, டயானாவின், பாரம்பரிய அரச குடும்பத்துக்கு எதிரான முட்டாள்தனமான சிந்தனைகளை நிறுத்த அரச குடும்பம் விரும்பியதாகவும் அந்த ஆவணப்படத்தில் எழுத்தாளர் ஜெப்சன் குறிப்பிட்டிருந்தார்.
டயானாவின் குரல் பயிற்சியாளர் பீட்டர் செட்டலனுக்கு சொந்தமான, மற்றும் 2017-ல் ஒளிபரப்பப்பட்ட ‘டயானா இன் ஹெர் ஓன் வேர்ட்ஸ்’ என்ற ஆவணப்படம், இளவரசி டயானா திருமணத்திற்கு ராணியிடம் உதவி கேட்க அழுகையுடன் சென்றதை குறிப்பிட்டுள்ளது.
டயானாவின் திடீர் மரணம், 1997-ம் ஆண்டு கார் விபத்தில், அரச குடும்பத்தை உலுக்குவதாக அமைந்தது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான டயானாவின் இழப்பு, ராணி எலிசபெத்துக்கு அதிர்ச்சிகரமான சம்பவமாகியது. அமைதியான நபராக அறியப்பட்ட எலிசபெத்தின் பாத்திரம் தலைகீழாக மாறியது. பால்மோரில் அரண்மனையில், டயானாவின் குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்வது மட்டுமே எலிசபெத்தின் வேலையாக இருந்தது சில காலத்துக்கு.
இருப்பினும், இங்கிலாந்து மக்கள், டயானாவின் மரணச் செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாது வேறு விதமான கருத்துகளை பேசத் தொடங்கினர். மேலும், ‘எங்களின் மீதும் உங்களது கவனத்தை திசை திருப்புங்கள்’ என்ற தலைப்போடு நாளேடுகள் அச்சாகி விற்பனை செய்யப்பட்டன. அப்போது, இங்கிலாந்தில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கும் பொருட்டு, அப்போதைய பிரதமர் டோனி பிளேயர் தலையிட்டு, ராணி எலிசபெத்தை வானொலி நேரடி ஒலிபரப்பில் பேச வைத்து, தணித்தார்.
ராணி எலிசபெத்தின் முழு ஆட்சிக் காலத்தில், டயானா மறைவிற்கு பிறகான சில நாள்கள் கசப்பானவை என்பதை அரச குடும்பம் உணர்ந்தது.
ராணி எலிசபெத்தின் வாழ்க்கை முரண்பாடுகளில் ஒன்று, அரச குடும்பத்தில் டயானாவின் தாக்கம், புதிதாக அரச குடும்பத்தில் மணம் முடித்து வருபவர்களுக்கு எவ்வளவு இடமளிக்கிறது என்பதன் மூலம் அளவிடப்படுவதாக மோர்டன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற சம்பவம் அரச குடும்பத்தில் மீண்டும் நடக்கக் கூடாது என்பதை எலிசபெத் லட்சியமாக வைத்திருந்ததாகவும் பேலஸ் பேப்பர்ஸ் பத்திரிகையில் அவர் எழுதியதாகக் கூறப்படுகிறது.
நன்றி இணையம்