டி.ஏ.ராஜபக்‌ஷவின் நினைவுதின நிகழ்வில் ஜனாதிபதி

0
206

டி.ஏ. ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று பிற்பகல் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் விசேட நினைவேந்தல் உரை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார்.

ராஜபக்ஷ ஞாபகார்த்த கல்வி, கலாசார மற்றும் சமூக சேவைகள் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வைபவம், மகா விகாரையின் இலங்கை ராமன்ய மஹா நிகாயாவின் அனுநாயக்க மினுவாங்கொட பத்தடுவன பிக்கு பயிற்சி நிலையத்தின் வண. நெதகமுவே விஜய மைத்திரி தேரர் தலைமையில் நடைபெற்றது.

மலேசியாவின் கோலாலம்பூர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சமித ஹெட்டிகே, “ஒரே திசை – ஒரே பாதை நிலைபேண்தகு அபிவிருத்திக்கான பாடங்கள்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

நினைவேந்தல் உரை உள்ளடங்கிய புத்தகமும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள டி.ஏ. ராஜபக்ஷவின் சிலைக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here