உலகின் மிகப் பெரிய செல்வந்தரான எலன் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்யும் நடவடிக்கையை பூர்த்தி செய்துள்ளார். இதனையடுத்து, டுவிட்டர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) பராக் அகர்வால் பிரதம நிதி அதிகாரி நெட் செகல் உட்பட உயர் அதிகாரிகள் பலர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
டுவிட்டர் நிறுவனத்தன் உரிமையாளராகியமை குறித்து எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், “இந்நிறுவனம் மீதான எனது ஆர்வம் பணம் சம்பாதிப்பதில் இல்லை. மனிதகுலத்திற்கு உதவுவதற்காக சமூக ஊடக தளமான டுவிட்டரை வாங்கினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்
51 வயதான எலன் மஸ்க் டெஸ்லா வாகனத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமாகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.