வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 48,777 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதுதவிர, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, காலி ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவான நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் 11 ஆயிரத்து 437 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 916 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.