ஜப்பானில் நடைபெற இருக்கும் ஜப்பான் டோக்கியோ சர்வதேச அழகு ராணி போட்டியில் கலந்து கொள்ள இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவன்ஜலின் பிரான்சியா லட்சுமணர் ஜப்பான் பயணமானார்..
லண்டனில் வசிக்கும் தற்போதைய ஐக்கிய இராச்சிய உலக அழகி இவன்ஜலின் இலங்கை அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியை பூர்வீகமாக கொண்டவர் . இலட்சுமணர் சாந்தி தம்பதியரின் புதல்வியாவார்.
ஐக்கிய ராஜ்யத்தில் உலக அழகு ராணியாக 2021. 22 இல் தெரிவாகிய இவன்ஜலின் அதுக்கு முன்பு பெரிய பிரித்தானியாவில் உலக இளம் அழகியாக 2017 18 இல் தெரிவானவர்.
இவர் ஜப்பானில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி நடைபெற இருக்கும் அறுபதாவது உலக அழகி போட்டியில் கலந்து கொள்ள கடந்த திங்களன்று(28) திங்கட்கிழமை லண்டனில் இருந்து ஜப்பான் பயணம் ஆனார் .
இந்த ஜப்பான் சர்வதேச உலக அழகி போட்டி எதிர்வரும் டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி நடைபெற இருக்கின்றது.அதில் எண்பதுக்கும் அதிகமான நாடுகளில் இருந்து அழகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
உலக அழகு ராணி 2015ல் ஐக்கிய ராஜ்யத்தின் 15 வயது அழகு ராணி போட்டியில் தெரிவாக 2015 லண்டன் அவுருது குமாரி போட்டியிலும் தெரிவாகி இருந்தவர்.
இவர் தற்போது பிரித்தானிய பிரஜை யாக இருந்தபோதிலும் அவருடைய பெற்றோர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள்.
இவர் பிரித்தானியாவில் பல தர்மஸ்தாபனங்களை நடத்தி வருகின்றார். அதனூடாக இவர் மட்டக்களப்பு பகுதிகளிலே வீடற்ற வர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்ததோடு காலி பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கி வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வி.ரி. சகா