தங்க பிஸ்கட்டுகளுடன் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி கட்டுநாயக்கவில் கைது

0
308

எட்டு தங்க பிஸ்கட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலைய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவரை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் இன்று காலை கைது செய்துள்ளனர்.

சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ கிராம் எடையுள்ள 8 தங்க பிஸ்கட்டுகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயற்சித்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை துபாயிலிருந்து வந்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு பயணிகள் முனையத்தில் பாதுகாப்புக் கடமையிலிருந்த குறித்த அதிகாரியிடம் தங்க பிஸ்கட்டுகளை வழங்கியிருக்கலாம் என சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் சந்தேகிப்பதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here