தன்சல் வழங்க ஏற்பாடு செய்து கொண்டிருந்த தந்தையும் மகனும் உயிரிழப்பு

0
703

வெசாக் தினத்தில் தன்சல் வழங்க ஏற்பாடு செய்து கொண்டு இருந்த சந்தரப்பத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவமொன்று கம்பளை புப்புரஸ்ஸ நகரில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்று (23/05) வெசாக் தினத்தில் தன்சல் வழங்குவதற்க்காக நேற்று (22/05) இரவு முழுவதும் புப்புரஸ்ஸ நகரில் உள்ள இளைஞர்கள் ஏற்பாடு செய்து கொண்டு இருந்துள்ளனர். இதன்போது, இரவு திடீரென மின்சாரம் தூண்டிக்கப்பட்டதால் இந்த வேலைகளை செய்து கொண்டு செல்வதற்காக ஜெனரேட்டர் ஊடாக மின்சாரத்தினைப்; பெற்று வேலை செய்துள்ளனர்,

இதன் போது இரவு 2.30 மணியளவில் அப்பாவும் மகனும் ஜெனரேட்டர் இருந்த இடத்திற்கு அருகில் நித்திரை கொண்டுள்ளனர். இதன்போது, திடீரென ஜெனரேட்டர வேளை செய்யாமல் போனதால் அங்கு உள்ள இளைஞர்கள் சென்று பார்த்துள்ளார். இதன்போது நித்திரை கொண்டிருந்த குறித்த தந்தையின் முகத்தில் கரப்பான் பூச்சி கடிப்பதை பார்த்த இளைஞன் அவரை தட்டி எழுப்பி உள்ளார். ஆனால் அவர் எந்த மூச்சு பேச்சு அசைவும் இல்லாத காரணத்தினால் பார்க்க சென்ற இளைஞன் வெளியில் வந்து அங்கு உள்ளவர்களுக்கு கூறியுள்ளார்.

உயிரிழந்த தந்தையின் மகனும் எவ்வித அசைவின்றியும் இருந்துள்ளதையும் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இளைஞர்கள் புப்புரஸ்ஸ பன்விலதென்ன கிராமிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர், கொண்டு சென்றாலும் 40 வயது தந்தையும் 17வயது மகனும் இறந்த நிலையில் இருந்துள்ளனர்.
ஜெனரேட்டரை இயக்கிவிட்டு தூங்கச் சென்ற தந்தையும் மகனும் (23) அதிகாலை உயிரிழந்துள்ளதாக புபுரஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.

புபுரஸ்ஸ நெஸ்டா காலனியை சேர்ந்த சனத் ரோஹன (40) மற்றும் ககன மதுசங்க (17) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

ஜெனரேட்டரில் இருந்து வெளியான கரியமில வாயுவை சுவாசித்து இருவரும் உயிரிழந்திருக்கலாம் என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் புபுரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

புபுரஸ்ஸ மக்களிடையே இச்சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here