தபால்மூல வாக்குகளைப் பதிவு செய்வதற்கான இடங்கள் அறிவிப்பு

0
84

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளைப் பதிவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்பிரகாரம், செப்டம்பர் 4 ஆம் திகதி, மாவட்டச் செயலர்கள் அலுவலகங்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்களில் தபால் வாக்குகளைப் பதிவு செய்ய முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் தொடர்பான விபரங்களும் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு மற்றும் தேர்தல்கள் ஆணைக் குழுவினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை என்பன, அஞ்சல் மூல வாக்களிப்பின் அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

 ஐ. ஏ. காதிர் கான் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here