நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கு தகுதிபெற்றவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையுமென தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை எதிர்வரும் 12 ஆம் திகதிக்குள் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியானவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் ஆணைக்குழுவின் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.