பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்கப்படுமென, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் நேற்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதோடு, அதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 04 முதல் 11ஆம் திகதி நண்பகல் வரை, இதற்கான வேட்புமனுக்களை பெறுவதற்கான திகதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி என குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் புதிய பாராளுமன்றம் நவம்பர் 21ஆம் திகதி கூடுமெனவும் குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.