ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் இருந்து தம்மிக்க பெரேராவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் கோரிய மனுவொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ நேற்று தனது பாராளுமன்ற பதவியை துறப்பதாக அறிவித்ததையடுத் எவ்வித பாராளுமன்ற உறுப்புரிமைகளும் இல்லாத பிரபல தொழில் அதிபர் தம்மிக்கவை பசிலின் இடத்துக்கு நியமிக்குமாறு கோரப்பட்டது.
அதனையடுத்து இன்று வெள்ளிக்கிழமை இவ்வாறான மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளதுடன், பிரபல தொழில் அதிபர் தம்மிக்க தனக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களிலும் தான் வகித்த பதிகள் அனைத்திலும் இருந்து நீங்கிக் கொள்வதாகவும் இன்று அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.