இந்திய அரசாங்கத்தினால் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவிகளை பகிர்தளிக்கும் விடயத்தில் அரசியல் தலையீடு குறிப்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸைச் சார்ந்த தொண்டமான் தரப்பு தலையிடுவதால் இவ்விடயத்தில் இருந்த தாம் விலகுவதாக அகில இலங்கை கிராம சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது பற்றி மேலும் தெரிவிக்கையில்,
சங்கத்தின்; தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன குறிப்பிடுகையில்,
நாடளாவிய ரீதியில் நாம் எவ்வித பிரச்சினையும் இன்றி பொருட்களை வழங்குகின்றோம். ஆனால், மலையகத்திற்கு வழங்கும் போது தொண்டமான் கம்பனியினர் தலையிடுகின்றனர். அது எமக்கு இடைஞ்சல்.
எங்கிருந்தோ கிடைத்த பொருட்களுக்கு அரசியல் வாதிகள் தலையிடுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இதில் உரிமை கொண்டாட தொண்டமான் கம்பனிக்கு உரிமை இல்லை.
பொருட்கள் பகிர்ந்தளிக்கும் விடயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். வறுமையான குடும்பங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாரத்துக்கொள்வார்கள். அடிமட்ட அதிகாரிகள் என்ற ரீதியில் வறுமையில் இருப்பவர்கள் யார் என்பது எமக்குத் தெரியும். தயவு செய்து தொண்டமான் தரப்பினர் இதில் தலையிட வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.