தமிழக நிவாரண விடயத்தில் தலையீடு- ஜீவன் மறுப்பு

0
395
தமிழக அரசால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை பங்கிடுவதில் அரசியல் தலையீடு ஏற்பட்டுள்ளது என்றும் இவ்விடயத்தில் நான் தலையிட்டதாகவும் போலியான குற்றச்சாட்டை கிராம சேவையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டை நான் மறுத்துள்ளேன்.
இந்நிலையில் இதில் அரசியல் தலையீடு இடம்பெறுவதாகவும், அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் ஶ்ரீலலங்கா கிராம சேவையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன இன்று சுட்டிக்காட்டியுள்ளார்.
பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள மக்களுக்கும் வறியவர்கள் யார் என்பது தெரியும். பங்கீட்டு பணியை அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள், மேலும் அரசியல்வாதிகள் தலையிடுவதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
என்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கிராம சேவையாளர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பிவைக்கப்படும். குற்றச்சாட்டை அவர்கள் நிரூபிக்காத பட்சத்தில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
5000 ரூபா நிவாரணப் பணியின்போது குறைப்பாடுகள் இடம்பெற்றன. நிறைய பேருக்கு அந்த கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை. மீண்டும் அந்த தவறு இடம்பெறக்கூடாது, அனைவருக்கும் உரிய வகையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியிருந்தோம். நான் எவருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை.
தனக்கு தேவையான ஆட்களுக்கு வழங்குமாறு அழுத்தம் கொடுக்கவும் இல்லை. இது ஒரு போலியான குற்றச்சாட்டு, இவ்விடயத்தை நிரூபிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
Jeevan FB

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here