சிறைவாசம் அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதி ஒருவருக்கு அரச உயர் விருது வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற வருடாந்த அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்விலேயே அவருக்கு விருது வழங்கப்பட்டது.
சிவலிங்கம் ஆரூரன் என்ற அரசியல் கைதியே தான் எழுதிய நுாலுக்காக இந்த விருதைப் பெற்றுக்கொண்டுள்ளாா்.
ஆரூரன் எழுதிய “ஆதுரசாலை” என்ற நாவலுக்கு சிறந்த நாவல் விருது வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பித்தலை சந்தியில் 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவம் தொடா்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அவா் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகின்றாா்.
சிறையில் இருந்தவாறே “ஆதுரசாலை” என்ற தமிழ் நாவலை எழுதியமைக்காக ஆரூரனுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆரூரன் சிறைக்குள் இருந்தவாறே எட்டு நுால்களை எழுதியுள்ளாா். இந்த எட்டு நுால்களுமே அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.