தீபாவளியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 25ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் பாடசாலைக்கு மாணவர்களின் வரவு வீதம் குறைவாக இருப்பது வழக்கம். இவ்வாறான நிலைமையினால் விடுமுறை வழங்கத் தீர்மானித்துள்ளேன்.
25 ஆம் திகதி விடுமுறைக்கு பதிலாக ஒக்டோபர் 29ஆம் திகதி குறித்த பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் எப்பாகத்திலும் இந்த 25 ஆம் திகதி மேற்படி விடுமுறை தேவை இல்லையெனில் வழமைப்போல இயங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.