இலங்கையின் பிரபல நடிகர் தர்மராஜா தர்ஷனின் பூதவுடல் இன்று காலை முதல் பிற்பகல் 3 மணிவரை ஜெயரட்ண மலர்சாலையில் வைக்கப்பட்டு அவரது சொந்த ஊரான இரத்தினபுரி, இறக்குவானைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரபல சிங்கள கலைஞர்கள் ரஞ்சன் ராமநாயக்க, சனத் குணதிலக, சங்கீதா வீரரத்ன, ஏனைய கலைஞர்கள், மறைந்த தர்ஷனின் இரசிகர்கள் என ஆயிரக்கணக்கான உறவுகள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
தர்ஷனின் இறுதி கிரியைகள் நாளை மறுதினம் புதன்கிழமை அவரது சொந்த ஊரிலேயே இடம்பெறும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.