தலவாக்கலையில் ஒரு இலட்சம் ரூபா ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்

0
187

தலவாக்கலை அருள்மிகு ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தின் வருடார்ந்த தைப்பூச திருவிழாவின் 7ஆம் நாள் மாம்பழத்திருவிழா நேற்று (08) மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. பூஜையின் பின்னர் முருகப் பெருமானுக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஏலத்தில் விடப்பட்டது.

அம்மாம்பழம் ரூபா ஒரு இலட்சம் வரை பக்தர்களால் ஏலம் கேட்கப்பட்டது. இதன்போது ஏலம் விடப்பட்ட குறித்த பழத்தை தலவாக்கலை நகரில் இயங்கும் ஜப்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஜெகமோகன் ஒரு இலட்சம் ரூபா பணத்தை செலுத்தி மாம்பழத்தை பெற்றுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here