தலவாக்கலையில் விபத்து சாரதி வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதி

0
267

 

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கர வண்டியில் சாரதி பலத்த காயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இச்சம்பவம் 31 ‌அன்று மாலை 3:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

தலவாக்கலை பிரதேசத்தில் இருந்து லிந்துலை நோக்கி சென்ற போது நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான விசாரணையை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அக்கரப்பத்தனை நிருபர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here