பழங்கள் மற்றும் மரக்கறி விற்பனை கடையில் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை நகரில் நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் இச்சம்பவம் ஏற்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
தலவாக்கலை பொலிஸார், மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் ஒரு மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதேவேளை குறித்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரின் உதவியாளர் கடையில் இல்லாத போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயினால் மரக்கறி மற்றும் பழங்கள் முற்றாக தீக்கிரையாகியுள்ளது. தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.