தவறி வீழ்ந்து உயிரிழந்தவர் பேராதனைப் பல்கலைக்கழக விவசாய பீட துணை ஆலோசகர் 

0
483

பேராதனை பல்கலைக்கழக மாணவர் குழுவுடன் உத்துமன்கந்த சரதியல் குன்றில் ஏறும்போது தவறி வீழ்ந்து உயிரிழந்தவர் பேராதனைப் பல்கலைக்கழக விவசாய பீட துணை ஆலோசகர் என தெரிய வந்துள்ளது.

நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பேராதனை பல்கலைக்கழக மாணவர் குழு ஒன்று கள ஆய்வுப் பணிகளுக்காக மாவனல்ல உதுமன் கந்த என்ற குன்றுக்கு சென்றுள்ளது. அவர்களுடன் 27 வயதுடைய மேற்படி துணை ஆலோசகரும்  சென்றுள்ளார். இதன்போதே சுமார் 300 அடி பள்ளத்தில் அவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இவர் எல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

மாவனல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here