கொத்மலை பிரதேசத்துக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டு அலுவலகம் தவலந்தன்னை நகரில் (14) காலை திறப்பு விழா செய்து வைக்கப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சியின் கொத்மலை பிரதேச தமிழ் அமைப்பாளராக அண்மையில் நியமனம் பெற்ற சண்முகம் திருச்செல்வம் தலைமையில் இந்த செயற்பாட்டு அலுவலகம் உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுனர் நவீன் திஸாநாயக்காவின் உத்தியோகபூர்வ செயலாளரும் கொத்மலை தேர்தல் தொகுதி அமைப்பாளருமான விஜயவர்தன தேவகெதர உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஆ.ரமேஸ்.