காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாதிரியார் ஜீவந்த பீரிஸ் உச்ச மன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். தான் கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிடுமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி, விமானப்படைத் தளபதி, கடற்படைத் தளபதி, சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக அவர்களது சட்டத்தரணிகள் ஊடாக சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
எவ்வித நியாயமான அடிப்படையும் இன்றி தம்மை கைது செய்ய பிரதிவாதிகள் தயாராகி வருவதாகவும் குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடலின் ஆர்ப்பாட்டத்தில் முன்நின்றவர்கள் கடந்த சில நாட்களாக கைது செய்யப்பட்டு வரும் நிலையிலேயே பாதிரியார் ஜீவந்த பீரிஸ் இவ்வாறான மனுவை தாக்கல் செய்துள்ளார்.