திடீர் வேலை நிறுத்தத்தினால் நானுஓயா புகையிரத நிலையம் வெறிச்சோடியது

0
104

நாடளாவிய ரீதியில் (9) நள்ளிரவு புகையிரத நிலைய அதிபர்களின் பணிபுறக்க ணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் காரணமாக நானுஓயா புகையிரத நிலையம் மூடப்பட்டு இராணுவத்தினரும் அதிகமான பொலிஸாரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர் அத்துடன் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

புகையிரத நிலைய அதிபர்களின் பணிபுறக்கணிப்பு காரணமாக ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் குறிப்பாக அதிகமான சுற்றுலா பயணிகள் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு வருகை தந்து மீண்டும் திரும்பி செல்கின்றன . இதனால் நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுற்றி திரிந்து பேருந்துக்களில் பயணம் செய்கின்றனர்.

தொழிற்சங்க போராட்டம் காரணமாக நேற்று (09) பிற்பகல் 12:45 இற்கு கொழும்பிலிருந்து நானுஓயா நோக்கி புறப்பட்டு வந்த புகையிரதம் ஒன்று நானுஓயா புகையிரத நிலையத்தில் சேவைகளை இரத்தச் செய்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் பணிப்புறக்கணிப்புக்களை ஆரம்பிக்கும் போது பொது மக்களை நலன் கருதி பாதிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் திடீரென்று தீர்மானம் செய்யவேண்டாம் எனவும் குறித்த தொழிற்சங்க போராட்டம் முன்கூட்டி அறிவித்திருந்தால் ரயில் பயணங்களை தவிர்த்து தாங்கள் வீடுகளிலேயே தங்கியிருந்திருக்கலாம் அல்லது வேறு பொது போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து இருக்கலாம் என்றும் இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கத்தின் மீதும் தொழிற்சங்கங்கள் மீதும் பொது மக்களுக்கு அதிர்ப்த்தி ஏற்படுவதாகவும் பலர் குற்றம் சுத்துகின்றனர்.

நானுஓயா நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here