திருமறைக் கலாமன்றம் நடத்தும் ‘திருமகனே தாலேலோ’ என்னும் கிறிஸ்து பிறப்பு சிறப்பு நிகழ்ச்சி எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு இல.286 பிரதான வீதி,யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ப.யோ.ஜெபரட்ணம் அடிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
திருமறைக் கலாமன்றக் கலைஞர்களும் தேவாலயங்களில் பாடகர் குழாம்களும் இணைந்து கரோல் கீதங்களை வழங்கவுள்ள இந்நிகழ்வில் கத்தோலிக்க தேவாலயப் பங்குகளான யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயம், குருநகர் புனித யாகப்பர்
ஆலயம் ,நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலயம், புனித பரலோக அன்னை ஆலயம்,சுண்டிக்குளி புனித யுவானியார் ஆலயம்,நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயம்,மாசியப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயம் மற்றும் அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபையின் யாழ்ப்பாணம் நகர்பணி என்பன பங்குபற்றிச் சிறப்பிக்கவுள்ளன.
இந் நிகழ்வில் ஆர்வமுள்ள அனைவரையும் கலந்துகொள்ளுமாறு திருமறைக் கலாமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.