திருகோணமலை சீனாக்குடா விமானப்படை கல்விபீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எரோ பேஸ் 2024 ((“Aero Bash” 2024) கண்காட்சி நிகழ்வு இன்று (22) மாலை சிறப்பு விருந்தினரான இலங்கை விமானப்படைத் தளபதி ஏயாமார்ஷல் உதயனி ராஜபக்ஷ அவர்களினால் சீனாக்குடா விமானப்படை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த கண்காட்சியானது எதிர்வரும் 26ஆம் திகதி வரை தினமும் மாலை 3.00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது. இதில் கல்வி தொழில்நுட்ப மற்றும் வர்த்தக கண்காட்சியில் இலங்கை அரச பல்கலைக்கழகங்கள் தனியார் பல்கலைக்கழகங்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வியாபார மற்றும் தொழில்நுப்ப கூடாரங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இலங்கை விமான படையின் விமான சாகசங்கள், விமானப்படை பரசூர் வீரர்களின் பரசூட் சாகசங்கள், விமானப்படை மோப்ப நாய்களின் சாகச நிகழ்வுகள், விமானப்படை மீட்பு குழுவினரின் விசேட மீட்பு நடவடிக்கை தொடர்பான காட்சிகள், மற்றும் அங்கம்புர மற்றும் தற்காப்பு கலை காட்சிகள், விமானப்படை பேண்ட மற்றும் அணிவகுப்பு குழுவினரின் விசேட காட்சிகள், இரவு நேர இசை நிகழ்ச்சிகள் போன்ற பல நிகழ்ச்சிகள் இந்த நிகழ்வில் உள்ளடங்குகின்றன.
உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த கட்காட்சியில் முதல் முறையாக கிழக்கு மாகாணத்தில் டெண்டம் ஜம்ப் சாகச நிகழ்வும் இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.