திருமலையில் இன்று முதல் ‘Aero Bash’

0
243

திருமலை சீனாக்குடா விமானப்படை கல்விபீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எரோ பேஸ் ‘Aero Bash’ 2024 நிகழ்வுகள் 2024 இன்று 22ஆம் திகதி முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை சீனாக்குடா விமானப்படை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

‘Aero Bash’ 2024 கல்வி தொழில்நுட்ப மற்றும் வர்த்தக கண்காட்சியில் இலங்கை அரச பல்கலைக்கழகம்கள் தனியார் பல்கலைக்கழகம்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வியாபார மற்றும் தொழில்நுப்ப கூடாரங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இந்த கண்காட்சியில் இலங்கை விமான படையின் விமான சாகசங்கள், விமானப்படை பரசூர் வீரர்களின் பரசூட் சாகசங்கள், விமானப்படை மோப்ப நாய்களின் சாகச நிகழ்வுகள், விமானப்படை மீட்பு குழுவினரின் விசேட மீட்பு நடவடிக்கை தொடர்பான காட்சிகள், மற்றும் அங்கம்புர மற்றும் தற்காப்பு கலை காட்சிகள், விமானப்படை பேண்ட மற்றும் அணிவகுப்பு குழுவினரின் விசேட காட்சிகள், இரவு நேர இசை நிகழ்ச்சிகள் போன்ற பல நிகழ்ச்சிகள் இந்த நிகழ்வில் உள்ளடங்குகின்றன.

இதன் மூலம் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை பெற முடியும். இந்த நிகழ்வுகள் தினந்தோறும் மதியம் 3:00 மணிக்கு ஆரம்பிக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்வில் விசேடமாக இலங்கையின் முதல் முறையாக கிழக்கு மாகாணத்தில் டெண்டம் ஜம்ப் சாகச நிகழ்வும் இடம்பெற உள்ளது.

திருமலை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here