திருமலை மாவட்டத்தில் 100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல்

0
328

“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 19ஆவது நாள் போராட்டம் (19.08.2022) வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலகபிரிவிற்குட்பட்ட இக்பால் நகர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இப் போராட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மக்கள், கிராம பெண்கள் சிறுகுழுக்கள், பெண்கள் அமைப்பினர், இளைஞர்கள்,மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இச் செயல்முனைவில் கலந்து கொண்டவர்கள் தங்களது போராட்டத்தினை இக்பால் நகர் கிராமத்தின் திருமலை நிலாவெளி பிரதான வீதி ஓரத்தில் நின்று தங்களுக்கான அரசியல் தீர்வு வேண்டிய போராட்டத்தினை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்த போதும் உரிய அனுமதிகள் கிடைக்கப் பெறாத சூழ்நிலை ஏற்பட்டது இருந்த பொதும் இப் போராட்டத்தினை குச்சவெளி பிரதேசத்திலுள்ள இக்பால்நகர் பொது விளையாட்டு மைதான வளாகத்தில் நடாத்தப்பட்டது.

கலந்து கொண்டவர்கள் “நாங்கள் நாட்டை துண்டாடவோ, தனியரசோ கேட்கவில்லை,  இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம்” ,“வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும்” , “13ஆவது திருத்தச்சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்துக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது” , “ஒன்று கூடுவது எமது உரிமை”, “கருத்துச் சுதந்திரம் எங்கள் உரிமை”, “நடமாடும் சுதந்திரம் எங்கள் உரிமை”, “விரட்டாதே விரட்டாதே சிவில் அமைப்பினரை விரட்டாதே” , “எங்கள் நிலம் எமக்கு வேண்டும்”,  “மத சுதந்திரத்தை தடுக்காதே”, தமிழ் பேசும் அரசியல்வாதிகளே எங்கள் குரல் கேட்கவில்லையா”,
“தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக இணையுங்கள்” எனும் கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து அமைக்கப்பட்ட கூடாரத்தில் அமர்ந்திருந்து தங்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு வேண்டும் எனும் கோரிக்கையினை தொடர்ச்சியாக ஊடகங்களுக்கும் அரசாங்கத்திற்கும் தமிழ் பேசும் அரசியல் வாதிகளுக்கும் ஒலிக்கச் செய்யும் வகையில் குரல் எழுப்பி இருந்தனர்.

இன்றைய தினம் கலந்து கொண்டவர்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் இப்பிரச்சினைகளிலிருந்து தாங்கள் விடுபடவும் சமத்துவமாக சம உரிரைமகளுடன் வாழக் கூடிய “அரசியல் தீர்வு” என்ன என்பது தொடர்பான கருத்துக்களையும் காகிதாதிகளில் எழுதிப் பொதுப் பலகையில் வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here