‘திரும்பிப்பார்’ படத்தின் First Look வெளியீடு – வீடியோ இணைப்பு

0
1576

பவி வித்யா லக்ஷ்மி புரடக்ஷன் கிரி தயாரிப்பில் “கொம்பு” படத்தின் இயக்குனர் E.இப்ராஹீம் இயக்கத்தில் வெளிவரவுள்ள படம் “திரும்பிப்பார்”.

வித்யா பிரதீப்,ரிஸி ரத்திக், ராஜ்குமார், பிக்பாஸ் டேணி,நாஞ்சில் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கினை இயக்குனர்கள் அமீர், சிம்பு தேவன், மடோனா அஸ்வின், தயாரிப்பாளர் CV குமார், தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஸ், இசையமைப்பாளர் ஜீவி பிரகாஸ், நடிகர்கள் விக்ரம் பிரபு ,மஹத், யாசிகா ஆனந்த் மற்றும் பல திரைப்பிரபலங்கள் வெளியிட்டனர்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு யுத்தகளத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காக பயன்படுத்தப்பட்ட “நிழல் நடை” என்ற யுத்த தந்திரத்தை மையமாக வைத்து இந்திய சினிமா வரலாற்றில் முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் ஆக்ஷ்சன், த்ரில்லர், நகைச்சுவை கலந்த படமாக வெளிவரவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரி சேரியில் நடைபெற்று முடிந்தன.

BMD சினிமா இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு தேவ்குரு இசையமைத்துள்ளார. பாடல்வரிகளை கவிஞர் அஸ்மின் எழுதியுள்ளார்.

ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் ஒளிப்பதிவு சக்திப்பிரியன், படத்தொகுப்பு பி.ஆர்.பிரகாஸ், ஸ்டன்ட் ஜாக்குவார் தங்கம் மற்றும் விஜய் ஜாக்குவார்,நடனம் சசிகுமார், ஆடை வடிவமைப்பு தனா, ஆடியோ கிராபர் விபி.சுகவேதன், மேக்கப் சசிகலா, மக்கள் தொடர்பு- வேலு ஆகியோர் பணியாற்றியுள்ளனர்

படத்தின் டீசர்,டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்க வெளியீடு குறித்த அதிகார அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here