கல்கிஸ்ஸை, வட்டரப்பல வீதி, செம்பலன்கொட்டுவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த இருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பத்தில் 36 வயதான ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன் 20 வயதான மற்றுமொரு நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இருவரும் கல்கிஸ்ஸை வட்டரப்பல வீதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான பின்னணி இதுவரையில் தெரியவில்லையெனவும், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர்.