தென்கொரிய தலைநகர் சியோலில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன்,
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய ஜனாதிபதி பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய தலைநகர் சியோலில் ஹெலோவின் கொண்டாட்ட நிகழ்வின் போது, ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 153 பேர் உயிரிழந்தனர். அவர்களில், 19 பேர் வெளிநாட்டவர் என்பதுடன், இலங்கையர் ஒருவரும் அடங்குகின்றார்.
அத்துடன் குறித்த நெரிசலில் சிக்கி மேலும் 82 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்ததாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் சீனா, நோர்வே, ஈரான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட மேலும் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் அதில் உள்ளடங்குவதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.