தேங்காய் பெற வரிசையில் காத்திருந்த மக்கள்

0
4

நடமாடும் லொறிகள் மூலம் குறைந்த விலையில் தேங்காய் விற்பனை செய்யும் திட்டமொன்றை தெங்குப் பயிர்ச்செய்கை சபை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு விற்கப்படும் தேங்காய்களை கொள்வனவு செய்தவற்காகவே மக்கள் இவ்வாறு வரிசையில் நிற்கின்றமையே இதற்கு காரணமாகும்.

நிலவும் தேங்காய் விலையை கருத்திற் கொண்டு நுகர்வோர் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வாக  (23) அதன் முதற் கட்டமாக கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை, கடுவெல மாநகர சபை பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தேங்காய் ஒன்றின் வலை ரூ.100 – 120 வரை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

கொழும்பு எல்லைக்குட்பட்ட வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலும், கிருலப்பனை பொதுச் சந்தைக்கு அருகாமையிலும், நிதி அமைச்சின் வளாகத்திலும் இவ்வாறு நடமாடும் லொறிகள் மூலம் தேங்காய்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அத்தோடு, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபைக்குட்பட்ட வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலும், நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கிற்கு அருகாமையிலும் நடமாடும் தேங்காய் விநியோகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here