சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ர்தல் காலத்தில் பல்வேறு அதிகாரங்களைக் கையில் எடுத்துச் செயற்படுகின்றபோதும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக ஒருவருக்கோ அல்லது ஒரு அமைப்புக்கு எதிராக வழக்குத் தொடரும் அதிகாரம் ஆணைக்குழுக்கு இல்லை.
பொலிஸ் முறைப்பாட்டின் ஊடாக முன்னெக்கப்படும் விசாரணைகள் தாமதமாவதால் பல நேரங்களில் தேர்தல் கால அத்து மீறல்களால் இழைக்கபடும் அநீதிகளுக்கு உரிய காலத்தில் நீதி கிடைக்காது போய்விடுகிறது.
எனவே தேர்தல் ஆணையகம் வழக்குத் தொடரக்கூடியதான சட்ட ஏற்பாடுகள் அவசியமாகின்றன என முன்னாள் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்து உள்ளார்.
சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவும் வழக்குத் தொடரும் அதிகாரமும் எனும் தலைப்பில், பெப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க முன்னிலையில் இடம்பெற்ற இடம்பெற்ற (25/08) கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத் தெரிவிக்கும் போதே திலகராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் வருகையின் பின்னர் ஐனநாயகமாக தேர்தல்கள் இடம்பெறுவது பரவலாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் அதிகளவான அதிகாரங்களை கையில் எடுத்துச் செயற்படும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல் விதிமுறைகள் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்ய முயற்சிக்கிறது. அதனையும் தாண்டி தேர்தல் விதிமுறை மீறல்கள், வன்முறைகள் இடம்பறும்போது் அவற்றுக்கு எதிராக நேரடியாக வழக்குத் தொடரும் அதிகாரம் சுயாதீன ஆணைக்குழுவுக்கு இல்லை. அப்போது மேற்கொள்ளப்படும் பொலிஸ் முறைப்பாட்டின் அடிப்படையில் சாதாரண வழக்குகளாகவே அவை பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுபின்றன. சில நேரங்களில் வன்முறையில் ஈடுபட்டவரின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னரே வழக்குத்தீர்ப்பு வெளிவருகிறது. இது உண்மையில் ஜனநாயகத்தை கேள்விக்கு உட்படுத்துவதாகும்.
எனவே சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு வழக்குத் தொடரும் வகையில் சட்டம் உருவாக் கப்படல் வேண்டும் என்பதனை நாம் ஆதரிக்கின்றோம். அதே நேரம் தேர்தல் வன்முறைகள் எவை ? என்பது தொடர்பாக வரைவிலக்கணங்களைச் சரியாகவும் தெளிவாகவும் எழுதிக் கொள்ள வேண்டி உள்ளது. பொலிஸ் நிலையங்களில் இதற்கென விசேட பிரிவு உருவாக்குவது என்பதைவிட இப்போது பெரிதாக செயற்பாட்டில் இல்லாத சட்ட உதவி ஆணைக்குழுவின் பங்களிப்பை தேர்தல் காலத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யும் தேவைக்காகப் பயன்படுத்தலாம். மேலும் சுயாதீன ஆணைக்குழு அமைப்பு அரசியலமைப்புடன் தொடர்புடையது என்ற வகையில் இந்தச் சட்டமாக்கல் குறித்து அரசியலமைப்பு சபையுடன் உரையாடுவது பொருத்தப்பாடுடையது என்றும் தெரிவித்தார்.