தேர்தல் சட்டங்கள் அமுலில் இருப்பதால் அதற்கு மதிப்பளித்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முச்சக்கர வண்டியில் பயணித்த சம்பவம் ஒன்று இன்று (26) பதிவாகியுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் விசேட கூட்டம், இன்று (26) மாலை அத்துருகிரியவி லுள்ள விஜேதாஸ ராஜபக்ஷவின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காகவே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு முச்சக்கர வண்டியில் அவ்விடத்திற்கு வந்தமை விசேட அம்சமாகும்.
“தேர்தல் சட்டங்கள் அமுல்படுத்தப்பட் டுள்ளதால், அந்தச் சட்டங்களுக்கு மதிப்பளித்து அரச வாகனங்களைப் பயன்படுத்தாது முச்சக்கர வண்டியில் வந்தேன்” என, மைத்திரிபால சிறிசேன இதன்போது ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த விசேட சந்திப்பில், நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவும் கலந்து கொண்டார். விஜேதாஸ ராஜபக்ஷ, இம்முறை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு களத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )