பொதுத் தேர்தலை எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னதாக நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்தின்படி சாத்தியமில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றால் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்றும் எமது அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குகூட கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இல்லையெனில் பெரும்பான்மை வாக்குகளுடன் பாராளுமன்றத்தை கலைக்க கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் அந்தக் கோரிக்கையை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து ஜனாதிபதியே தீர்மானிக்க முடியுமென்றும் தெரிவித்த அவர், ஜனாதிபதி அதை ஏற்கவில்லை என்றால், எதுவும் செய்ய முடியாது என்றும் எனவே, இந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு எதிர்காலத்தில் பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.